கணவனே கேளடா !



பெண் எனும் 
பொக்கிஷம் . . . 
காதலித்து நீ பெற்ற 
காதலியானாலும் 
திருமணம் பேசி 
உன்னவளை 
இரு வீட்டார் 
மணக்க வைத்தாலும் . . 
திருமணக்கும் போது 
பெண்ணவள் மனைவி 
எனும் 
மகிமை பெறுகிறாள் . . .

நீ வாழ்ந்த கடந்த காலம் 
அவள் மறந்து விட்ட 
கஷாயம் . . .
இனிமேல் நீ 
அவளுக்காய் 
வாழ இருக்கும் 
காலம் அவள் 
சுவைக்க இருக்கும் தேன் . . .

தேக்கி வைத்த
மொத்த அன்பையும் 
அவள் அள்ளித்தர 
எதிர்பார்ப்பது 
உன்னிடம் . . . 
நீ அவள் இதயம் தாண்டி 
நேசித்தால் அன்றி  
பெற முடியாது 
அந்த பாசத்தை 
அவளிடம் . . .


அன்பு எனும் 
பெயரில் நீ இடும் 
கட்டளைகள்
அவள் எதிர் பார்த்த 
வாழ்க்கைக்கு 
நீ இடும் 
முட்டுக்கட்டைகள் . . . 
தேவை அறிந்து 
அவள் நடப்பாள் 
தேவை இன்றி 
நீ நடத்தாது இரு . . .
இது அன்பல்ல 
அடிமைத்தனம் . . . ! 


எதைவேண்டுமானாலும் 
அவளுக்காய் 
விட்டுக்கொடு 
எதுக்காகவும் 
அவளை விட்டுக்கொடுக்காதே . .
இந்த உலகில் 
நீ ஒரு 
ஆளாய் இருக்கலாம் . . . 
ஆனால் அவளுக்கு 
உலகமே 
நீயாய் இருப்பாய். . .


உன்னோடு மட்டுமே 
அவள் உடல் தாண்டி
உறவை பேணுவாள் . . . 
நீ அதற்கும் மேல் 
உயிர் தாண்டி 
உறவை பேணு . . .


சந்தேகம் எனும் பேய் 
சந்ததிக்கு கேடடா . . . 
சாமர்த்திய 
வாழ்வுக்காய் 
சாதிக்க தேவை 
இல்லை . . .
புரிந்துணர்வே 
போதும் . . . 
வாழ்க்கை சொர்க்கமாகும் . . .

அன்புடன்
அன்வாஸ் . . .  

2 comments:

  1. எதைவேண்டுமானாலும்
    அவளுக்காய்
    விட்டுக்கொடு
    எதுக்காகவும்
    அவளை விட்டுக்கொடுக்காதே .//
    எல்லா வரிகளும் சூப்பர்தான். இந்த வரிகள் அதிலும் விசேஷம்.

    ReplyDelete
  2. நன்றி தோழா உங்கள் கருத்துக்கள் என்னை இன்னும் எழுதத் தூண்டுகிறது . .

    ReplyDelete