கற்பனை



வானம் தான் எல்லையா ...

அதையும் தாண்டி
பயணிக்கும் "கற்பனை"
இல்லையா . . . ?

ஆயிரம் ஒளியாண்டு
பயணித்து காண வேண்டிய
கோள்களுக்கு,
நுண் நொடியில் பயணித்து
அதற்கு தோற்றம் கொடுக்கும்
இந்த கற்பனை . . . !

உருவம் இல்லா உணர்ச்சி இது
நீ தேடலில் இருக்கும் போது . . .
உணர்ச்சி உள்ள உருவம் இது
தேடியதை அடையும் போது . . .

திட்டங்களின் மூதாதை ,
வெளியீடுகளின் எதிர்பார்ப்பு ,
அடைவுகளின் ஆசை ,
தீர்வுகளின் தீர்க்கத்தரிசனம் ,
இந்த கற்பனை . . .

நினைப்பதையெல்லாம்
நிலை நிறுத்தி
மீண்டும் மீண்டும்
கற்பனை செய்தால்
நிஜமாகும் ஒருநாள்
கற்பனை . . . !

மர உச்சி மேல் நின்று
தேன் கூடு களைப்பவன் போல்
அச்சு இரும்பு ஆனி இன்றி
மாட்டு வண்டிலில் பயணிப்பவன் போல்
இருக்குமென்றால்
உன் கற்பனை . . .
எப்படி இருக்கும்
என் கற்பனை . . . ?

உருவம் தொடரும் நிழழுக்கு
இருள் தானா
மரணம் தரும் . . . ?
உருவமே மரணித்து போனால் . . .
ஒளி எங்கிருந்து
நிழல் தரும் . . . ?

இப்படி இருக்கிறது
நம்மவர் கற்பனை . . .

இதை மாற்ற நீ செய்
கற்பனை . . . !

மனிதனின் படைப்புக்கு
அடித்தளம் கற்பனை . .
பறவையின் சிறகு பார்த்து
பறக்க நினைத்த கற்பனை
இன்று விமானம் . . .

சந்தர்ப்பத்தை சாத்தியமாக்க
இன்றே செய் கற்பனை . . . !

No comments:

Post a Comment