பிடித்திருக்கு அன்பே இந்த தண்டனை . . . !


கண்ணீர் எனக்கு புதியதல்ல . . . 
எனக்கு வந்திருந்த சோகங்களை
வழிமறித்து கேட்டுப்பார் . . . !
என் கண்களை
மழை போல் நனைத்த கதை அது சொல்லும் . . . !

குடை போல வந்தாயே கண்ணே . . . 
என் வாழ்வில் . .  . !
தரிசாய் கிடந்த என் உள்ளம் 
பசுமை கொள்ள வைத்தயே . . . !

உன் மேல் எனக்கு "காதல்"
உன்னைக் காண முன்பே 
வந்திருந்ததாய் . . . 
உன்னை முதன் முதலாய் காணும் போது 
நான் உணர்ந்தேன் . . . !

உயிரே ஜென்மங்கள் மீது 
நம்பிக்கை இல்லை . . . 
என்றாலும்,
போன ஜென்மத்து காதல் 
உனக்கும் எனக்கும் பிறந்து இருந்ததா ?

மகிழ்ச்சிகளின் உச்சம் 
உள் நெஞ்சில் ஒரு சுகமான சூடு 
பட்டாட் போல . . . 
சுல்லென்ற இதமான வலி 
உன் காதல் கொடுத்தது . . . !

இத்தனை நாள் வரை 
இப்படியொரு சந்தோஷம் கொண்டதில்லை . . . 

நான்ஏன் பிறந்தேன் என 
என்னிடம் பலமுறை கேட்டுக்கொண்டாலும்,
பதில் மட்டும் 
தெரியாமல் இருந்தேன் . . . 
இந்தக் காதல் எனக்குள் வரும் வரை . . . !

நீ என்னை எதேர்ச்சையாய் பார்த்தாலும்,
அதைக்கூட 
நிஜமாய் எடுத்துக்கொண்டு . . . 
உயரப் பறந்தேனே நான் 
ஒரு தலையாய் உன்னை காதலிக்கும் போது . . . !

நீயும் என்னுடன் காதல் கொண்டபின் ,
என்னை 
திரும்பி திரும்பி பார்ப்பாயே . . . 
அந்த அழகிய தருணங்களுக்கு 
அர்த்தம் கொடுக்கவே உயிரே . . . 
உன்னை என் காதலை எழுதுகிறேன் . . . 
இல்லை செதுக்குகிறேன் . . . !

ஒற்றைப்புல்லுக்கு 
அதிகாலையில் அழகு சேர்த்த பனித்துளி . . . 
வடிந்துவிழும் அழகிய தருணம் போல் 
எனக்கு அழகு சேர்த்த
காதல் பனித்துளி 
உன்னில் இந்த மண்ணில் வீழ்ந்தது . . . 
இதை தாங்கிக் கொள் என 
சொல்லாமல் சொன்னேன் . . . 
நீயும் தாங்கிக் கொண்டாய் 
என்னை என் காதலை . . . !

இந்த உலகில் 
எத்தனை உண்மைக்காதலர்கள் 
வாழ்ந்தாலும்,
எனது காதலே புனிதமானது என 
என்னுள் ஒரு இறுமாப்பு கொள்ள வைத்த 
நாம் காதல் . . . 
கடவுளுக்கு அடுத்தபடியாக 
புனிதம் என்பதை 
போற்றி நின்றது . . . !

ஒரு ஜீவன் உயிர் வாழலாம் . . . 
தனியே உறவாட முடியாது . . . 
உறவாட வேண்டில் ,
இரு ஜீவன் ஒரு ஜீவனாகும் 
வித்தை பயில வேண்டும் . . . 
இது காதல் வித்தை கண்ணே . . . 
நீயும் நானும் 
எங்கே கற்றோம் இதை ?

கற்காவிட்டாலும்,
உயிரோடு உறவாட 
காதல் வித்தை , 
வித்தையாய் நிறைய பாடம் 
உனக்கும் எனக்கும் சொல்லிக்கொடுத்தது . . . !

ஆரம்பக் கல்வி முத்தம் முதல் ,
அனைத்தும் இன்னும் அபூர்வம் . . . 
யாரும் இதற்கு முன் 
சொல்லிக்கொடுக்காத வித்தை . . . 

எப்படி நான் கற்றேன் ?
நீயும் தானே . . . 

நான் கனவில் மட்டுமே கண்ட 
உன் அரவணைப்பு . . . 
நிஜத்திலுமா ?
என் இரு கை சிறைக்குள் 
நீ எனை கைது செய்துகொண்டிருந்தாய் . . . !

எத்தனை தவறு செய்தாலும் இந்த 
சிறை கிடைக்குமா ?
என்னை இந்த சிறைக்குள் 
ஆயுள் கைதியாக்கி விடு . . . 

நான் சொல்லாவிட்டாலும் . . . 
நீயே தீர்ப்பு கொடுத்துவிட்டாய் . . . !

பிடித்திருக்கு அன்பே இந்த தண்டனை . . . !

No comments:

Post a Comment