பொய்


பொய் 
என்று உணர்ந்து 
உண்மை பேசும் மனிதர் சிலரே . . . !

உண்மை 
என்று சொல்லி 
பொய் பேசும் மனிதர் பலரோ . . . ?

பொய்யால் 
துன்பம் நிகழும் போது . . .
 உண்மைகளின் 
கொலைகாரன் இந்த பொய் . . . !

நன்மைகள் நிகழும் போதோ ?

அடுத்தவனின் கவனம் ஈர்க்க 
சொல்லும் பொய் . . . !
அவன்முன் மரியாதைக்காக
சொல்லும் பொய் . . . !

எதிர்பார்ப்புகள் 
நிறைவேறா சமயம் 
திருப்திக்காக சொல்லும் பொய் . . . !

பயத்தில் இருப்பவனின் 
தைரியம் வரவழைக்க 
சொல்லும் பொய் . . . !

சிரிக்க வைக்க . . . 
சிந்திக்க வைக்க . . . 
பயப்பட வைக்க . . . 
பரிகாசம் செய்ய . . . 
வினா தொடுக்க . . . 
விலை குறைக்க . . . 
சொல்லும் பொய்கள் . . . !

கடன் பட்டு 
கொடுத்தவன் குடைக்கும் போது 
நாளை தருவேன் எனும் பொய் . . . !

எல்லாமே குற்றங்கள் ஆகுமோ . . . ?

களவெடுத்தவன் கதறல்
எடுத்ததை 
எடுக்கவில்லை . . . !

கொலைகாரன் குமுறல் 
செய்ததை 
செய்யவில்லை . . . !

 சாட்சிகளின் மௌனம் 
பார்த்ததை பார்க்கவில்லை . . . !
கேட்டதை கேட்கவில்லை . . . !

விபச்சாரம் புரிந்தவனுக்கோ 
அது என்னவென்று தெரியவில்லை . . . !

எனும் பொய்களெல்லாம் 
நியாயங்கள் ஆகுமோ . . . ?

with love
Anwas. . . 

No comments:

Post a Comment